இந்தி சினிமாவை தென்னிந்திய படங்கள் ஆள்கின்றன. ரெடி, சிங்கம், பாடிகார்ட் வ‌ரிசையில் காக்க காக்க படத்தை போர்ஸ் என்ற பெய‌ரில் இந்தியில் ‌ரிமேக் செய்தனர். சூர்யா நடித்த வேடத்தில் ஜான் அபிரஹாம் நடித்திருந்தார்.

ஜான் நடித்த சமீபத்திய படங்கள் அனைத்தும் சுமார் என்ற போதிலும் செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வந்த போர்ஸ் மற்றப் படங்களின் வசூலை கணிசமான அளவில் பாதித்துள்ளது. இந்தப் படத்தின் வசூலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று வெளிப்படையாகவே ஆச்ச‌ரியம் காட்டுகிறார்கள் இதன் தயா‌ரிப்பாளர்கள்.

ரெடி, சிங்கம், பாடிகார்ட் போன்ற மற்ற தென்னிந்திய ‌ரிமேக் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படம் போர்ஸ். அப்படியிருந்தும் இந்தப் படத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று தயா‌ரிப்பாளர்கள் தரப்பு தெ‌ரிவித்துள்ளது.

மேலும் சில பதிவுகள்:

1,526..பார்வையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>