பாலிவுட் பிரபலங்களுக்கு முன்னணி கார் நிறுவனங்கள் கார்களை பரிசளிக்கும் செய்தி புதிதல்ல.தங்களது பிராண்டை எளிதாக பிரபலப்படுத்துவதற்காக சினிமா நட்சத்திரங்களுடன் கார் நிறுவனங்கள் எப்போதுமே நெருக்கம் காட்டி வருகின்றன.

அந்த வகையில், பாடி கார்டு படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், அதன் ஹீரோவாக நடித்த சல்மான் கானுக்கு க்யூ-7 எஸ்யூவியை பரிசளித்துள்ளது ஆடி கார் நிறுவனம். மும்பையில் நடந்த விழாவில் அந்த காரை சல்மானிடம் வழங்கியது ஆடி.

க்யூ-7 எஸ்யூவியை ஆடி நிறுவனம் பரிசளித்ததற்கு மற்றொரு முக்கிய காரணமும் இருக்கிறது. பாடி கார்டு படத்தில் ஏராளமான காட்சிகளில் ஆடி க்யூ-7 எஸ்யூவி அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆடியின் பிராண்டு சின்னமும் ஒரு காட்சியில் பிரத்யேகமாக காட்டப்பட்டுள்ளது.

இதனால், பாடி கார்டு படத்தின் மூலம் கோடிக்கணக்கானவர்கள் மத்தியில் தனது பிராண்டு பிரபலமடைந்துள்ளதாக ஆடி கருதுகிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே க்யூ-7 எஸ்யூவியை சல்மானுக்கு ஆடி பரிசளித்துள்ளது.

பரிசளிக்கப்பட்ட ஆடி க்யூ-7 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் இலங்கை மதிப்பில் 19,000,000.00 /- ரூபாயில் (190 லட்சம்) விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பதிவுகள்:

903..பார்வையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>