ஜீவன் நடித்து வெற்றியான திருட்டுப்பயலே திரைப்படம், பாலிவுட்டில் இயக்கப்படவுள்ளது.
தமிழில் வரவேற்பை பெற்ற ‘திருட்டு பயலே’ படத்தினை இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார் சுசி கணேசன்.
ஜீவன் பாத்திரத்தில் நீல் நித்தின் முகேஷ் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
மாளவிகா பாத்திரத்தில் அமிஷா படேலை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். சோனியா அகர்வால் பாத்திரத்தில் ரிச்சாவை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.
தமிழில் சிம்புவுடன் ஒஸ்தி, தனுஷ் உடன் மயக்கம் என்ன ஆகிய இரண்டு படங்களிலும் நாயகியாக நடித்தவர் ரிச்சா. இரண்டு படங்களுமே அடுத்த மாதம் வெளிவர உள்ளன.
இந்நிலையில் தமிழில் பெரும் வரவேற்பை பெற்ற திருட்டு பயலே படத்தின் இந்தி ரீமேக்கில் ஒப்பந்தம் ஆகி இருப்பதால் இந்தியில் அடுத்தடுத்த படங்களை ஜாக்கிரதையாக ஒப்புக் கொள்ள யோசித்து வருகிறார் ரிச்சா.
மேலும் சில பதிவுகள்:
தமிழ் ரிமேக் படத்திற்கு வரலாறு காணாத வசூல் !
முழு நீள நிர்வாண தரிசனம்! மீண்டும் ஏமாத்துவாரா பூனம் பாண்டே??
ஓடி(Audi) கார் நிறுவனம் சல்மானுக்கு அதி சொகுசு Q-7 கார் பரிசளிப்பு!



