ஆபாசமாக நடித்ததாக ஷகிலா மீது வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. தற்போது ஆசாமி என்ற படத்தில் ஷகிலா நடித்து வருகிறார். இதில் பீர் குடித்து குறி சொல்லும் போலி சாமியார் கேரக்டரில் வருகிறார்.
ஷகிலாவுக்கு நிஜமாகவே பீர் குடிக்கும் பழக்கம் இருப்பதாகவும் படப்பிடிப்பில் இயக்குரிடம் தினமும் பீர் வாங்கித் தரும் படி தொல்லை செய்ததாகவும் செய்தி பரவியது. அத்துடன் அரசியல் பிரமுகர் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்துவதாகவும் கூறப் பட்டது.
இதுபற்றி ஷகிலாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
ஆசாமி படத்தில் நடித்த போது இயக்குனரிடம் பீர் வாங்கித் தரும்படி நான் கேட்கவில்லை. என்னைப் பற்றி தவறான வதந்திகள் பரப்பப்பட்டு உள்ளது. எனக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. இப்படத்தில் வில்லி கேரக்டரில் வருகிறேன். அது எனக்கு பிடித்துள்ளது.
நான் அரசியல் பிரமுகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக வெளியான செய்தியும் வதந்திதான். இதுவரை எனக்கு திருமணம் நடக்கவில்லை. தனியாகத்தான் இருக்கிறேன். முதுமலைக்கு சுற்றுலா சென்றபோது கோவையைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை சந்தித்தேன். அவர் எனக்கு நெருக்கமான நண்பராக இருக்கிறார்.
இவ்வாறு ஷகிலா கூறினார்.

மேலும் சில பதிவுகள்:

558..பார்வையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>